சேந்தமங்கலத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதி 2023-24 கீழ் ரூ.21.50 லட்சம் மதிப்பீட்டில் கணினி அறை மற்றும் காத்திருப்பு அறையுடன் கூடிய புதிய இ-சேவை மைய கட்டிடம் கட்டும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.பொன்னுசாமி அவர்கள் முன்னிலையில் நானும், மாண்புமிகு.வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்களும் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினோம்.
நிகழ்ச்சியானது அட்மா குழு தலைவர் ஒன்றிய கழக செயலாளர் திரு.அ.அசோக்குமார் அவர்கள் தலைமையில் பேரூர் கழக செயலாளர்கள் திரு.தனபாலன், திரு.முருகேசன், மாவட்ட துணை செயலாளர் திருமதி.ராணி, பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.