முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் கழக ஆட்சியில்
கொண்டு வரப்பட்ட அருந்தியர் சமுதாய மக்களுக்கான 3% உள் இட ஒதுக்கீட்டை விளக்கிடும் வகையில் தமிழ்நாடு அருந்ததி முன்னேற்ற அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலைஞர் அறிவுத் திருக்கோயில் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தேன்.
நிகழ்ச்சியில் நாமகிரிபேட்டை ஒன்றிய கழக செயலாளர் திரு. கேபி.இராமசுவாமி,Ex.MLA., அவர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர் மருத்துவர்.மாயவன் அவர்கள், பேரூர் கழக செயலாளர்கள் திரு. பொன்.நல்லதம்பி அவர்கள், திரு.ஆர்எஸ்.ராஜேஸ் அவர்கள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு.ரமேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் உட்பட அருந்ததி முன்னேற்ற அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.